Wednesday, April 1, 2009

நான் கடவுள்

அண்மையில் நான் கடவுள் படம் பார்த்தேன். இயக்குனர் பாலா தன் சமூக உணர்வை, ஈடுபாட்டை ஒரு மனிதனாய் மிக நல்ல முறையில் இப்படத்தின் மூலமாக தந்துள்ளார்.

அப்பாவி மக்கள் சுயநலத்துக்காக எப்படி சமூகக் கழுகுகளால் புண் படுத்த படுகிறார்கள் என்பது படத்தின் மூலாதாரம். எங்கோ காசியில் வாழும் அஹோரி கதாநாயகன் ஆர்யா கதையின் பின்னலால் தன் ஊருக்கு வந்தாலும் படம் பார்க்கும் வரை படத்தில் ஈர்ப்பு நன்றாக உள்ளது. விருப்பு வெறுப்புகளை அகற்றி வாழும் ஆர்யா கடவுளாகவே கருதப்படுகிறார்.

உள்ளில் இருப்பது உண்மை என்று உறவுகள் என்ற சொல்லுக்கும் உணர்வுக்கும் அப்பாற்பட்டு ஒரு மேம்பட்ட நிலையில் கடவுளாய், மனிதனாய் வருகிறார். துஷ்டர்களை துவம்சம் செய்கிறார்.

ஒரு சிறு கிராமத்தில் நடக்கும் அக்கிரமங்களை தட்டி கேட்காத வினோதமான ஊராய் வேறு எந்த பெரிய மனிதர்களும் இல்லாத கிராமமாய் மலைக்கோவில் வந்தாலும் கதை சில நாட்களே நடக்கிறது என்ற பட்சத்தில் நாம் அதை கேட்க வேண்டாம்.

சிவபெருமான் போல சாம்பலை அள்ளி உடம்பில் பூசி அகம் புறம் கிடையான் என்று ஓர் வாழ்க்கை வாழும் அஹோரியாய் ஆர்யா நடிப்பில் மின்னுகிறார்.

பூஜா ஒரு குருடியாய் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். கதா பாத்திரங்களுக்கு ஏற்ப பொருத்தமான மேக்கப். நல்ல பாத்திரங்களுடன் கதையும் மிக நன்றாக அமைக்கப்பட்டுள்ளது.

அங்க ஹீனங்களுடன் உள்ள எத்தனையோ உயிர்களின் அவலங்களை காணும் போது மனம் கவலை படுகிறது. ஆனால் அவர்களின் உலகிலும் கேலியும் கூத்துமாய் ஓர் மகிழ்வு இருக்கிறது என்று இயக்குனர் ஒரேயடியாய் கவலையில் மூழ்காமல் சந்தோசத்தை கலந்து தந்தது நல்ல பாங்கு.

படப்பிடிப்பில் ஆர்தர் வில்சன், படத்தின் கலை அமைப்பு, மிக மிக முக்கியமாய் இசை ஞானி இளையராஜா இசை இந்த படத்தின் சக்தியை கூட்டுகிறது .

நான் கடவுள் அப்படியே இந்தியா முழுதும் செல்ல மாட்டாரா என்ற உணர்வு ஏற்படுகிறது.

முகில்

8 comments:

  1. நான் கடவுள் பார்க்க வேண்டிய படம். வித்தியாசமான கருத்து. ஆனால் குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்க இயலாத அளவு சில காட்சிகள் வக்கிரமாக இருந்தன. மொத்தத்தில் படம் நன்றாக இருந்தது

    ReplyDelete
  2. இப்படியொரு தளம் அமைக்க முயன்ற நண்பர் முகிலுக்கு முதற்கண் வாழ்த்துகள்.நல்ல விமர்சனஙகள்தான் ஒரு துறையை நன்கு வளர்க்கும்.இந்த வலையில் உறுப்பினராக எப்படி இணைவது..? படைப்புகளை எப்படி அனுப்புவது என தெரிந்தால் மிக சௌகரியமாக இருக்கும்.
    பகிர்ந்துகொள்ள நிறைய உண்டு. வருங்காலத்தில் வளமாக்குவோம். நன்றி.

    ReplyDelete
  3. சங்கப்பலகை மூலம் தொடர்பு கொண்ட நண்பருக்கும் அவரளித்த அன்பு ஊக்கத்திற்கும் நன்றி. அவரது முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகிறோம். உங்கள் படைப்புகளை comments ஆக வெளிப்படுத்தலாம். அல்லது tamilfilmcritic@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்தால் அது Blog-ல் பிரசுரம் ஆகும். www.tamilfilmcritic.blogspot.com என்ற தளத்தை உங்கள் நல்ல படைப்பாளர் நண்பர்களுக்கும் அனுப்பியுதவும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றியுடன்...முகில்

    ReplyDelete
  4. நான் கடவுள்....
    அண்மையில் நான் பார்த்த படங்களில் மிகச்சிறந்த படமான நான் கடவுள் தான் சிறந்தது என்று கருதுகிறேன். இளகிய மனது உள்ளவர்கள் பார்க்கக் கூடிய படமல்ல இது. இப்படத்தை பார்த்து நான் அழுது விட்டேன் என்பதுதான் உண்மை. நடிகர்கள் நடித்தார்கள் என்பதை விட வாழ்ந்தார்கள் என்பதே உண்மை. என் உறவினர் தன் சகோதரருடன் இப் படத்தை பார்க்கச்சென்றிருக்கிறார். அவரால் முழுமையாக பார்க்க முடிய வில்லை காரணம், சகோதரரின் இரண்டு பையன்களும் புத்தி சுவாதீனமற்றவர்கள். ஒருவன் இயற்கை எய்தி விட்டான். மற்றவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் இப்படத்தை பார்த்த என் உறவினரின் மனம் என்ன பாடுபடுமென்று நினத்துப்பார்க்கிறேன்....

    ReplyDelete
  5. I really liked the film except for the cruelty shown on some scenes where the villain ruthlessly tortures some poor disabled people for his own benefit. Althouh I expect the hero to releive their pain, which of course happens but late in the film. May be the director could have avoided Aarya smoking Ganja in the film. It might be something real looking as per story and the knot but the image of a hero could have gone a bit higher in the minds of the audience. Also it would not mislead the younger generation. It is a good film to watch with a different story line.

    ReplyDelete
  6. நண்பர்களே! நான் கடவுள் படத்தை பார்க்காத நண்பர்களை ஒருமுறை பார்க்கும்படி சொல்லுங்கள். அங்கவீனர்களை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதை இப்படத்தின் மூலமாக அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பை பாலா கொடுத்திருக்கிறார். மேலும், இப்படத்தை பார்த்தாவது இரக்கமற்றவர்கள் திருந்த மாட்டார்களா என்பது என் ஆவல். என்னைக்கவர்ந்தது பூஜாவின் நடிப்புதான்! என்ன அபார நடிப்பு அசல் குருடியைப்போல... அடுத்ததாக ஆர்யாவின் நடிப்பு நன்றாக இருந்தது என்றாலும் சாமி கஞ்சா பிடிப்பது என்பது ஏற்றுகொள்ளக்கூடியதாக இல்லை. இளைய தலைமுறையினருக்கு தவறான பின் பற்றுதலாகிவிடும்..

    ReplyDelete
  7. தமிழ்ப் படங்கள் ஒரு வியாபார ஸ்தலமாக உள்ள சந்தை. பொதுவாக நமது கண்ணோட்டம் நமக்கு நல்ல பொழுது போக்கான கதை காட்சிகள் ஆட்டம் பாட்டு, சண்டை, விறுவிறுப்பு என்று எப்போதும் எல்லாம் கலந்த கூட்டுக்கறிப் படங்கள்தான் வேண்டும். இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்று தமிழ் திரையுலக வித்தகர்கள் நம்புகிறார்கள். நான் கடவுள் அந்த வகையில் வந்த படம்தான். கொஞ்சம் மாற்றியுள்ளார்கள். இந்தப்படத்தின் சிறப்பம்சம், உடற்வளர்ச்சி இல்லாதவர்களின் சிரமங்கள், மேலும் இப்படிப்பட்டவர்களை கடத்தி பிச்சைத் தொழிலில் ஈடுபடுத்தும் தற்கால வஞ்சகர்கள், அவர்களுக்கு உடந்தையாய், போலிஸ் மற்றும் சமூகத்தின் மேல் வர்க்க போலிக்கள் இருப்பதை இயக்குநர் பாலா மற்றும் அவர் கூட்டணி கொடுத்துள்ளது மிக நன்று. பாடல்கள் கூட ஓரளவு கதையுடன் பிணைந்து வருவது நன்றாக உள்ளது. கதையைக் கொண்டு சென்ற விதம் மற்றும் கதா பாத்திரங்களின் வெளிப்பாடு செவ்வனே செயல் படுத்த்ப்பட்டுள்ளது. A well performed work by Baala and the team. He can give more to the society with the right back up of finance. Baala should try for even better themes and emerge from the crowd.

    ReplyDelete
  8. Nice post as for me. It would be great to read more concerning this matter.
    By the way look at the design I've made myself A level escort

    ReplyDelete

Thank you for expressing your great thoughts!