Sunday, April 26, 2009

A.R. ரஹ்மான் தொட்டிருக்கும் இமயம்

ஆஸ்கர் விருது திரைப்பட வட்டாரங்களில் மிகப் பெரியதாக சொல்லப்படும் ஒரு சிகரம். இந்தியத் திரைப்பட வரலாற்றில் ஒரு ஆஸ்கர் வாங்கி வந்திருக்கும் A.R ரஹ்மானைப் பாராட்டாத உள்ளங்கள் இருக்க இயலாது. அவரை திலிப் என்ற பெயரில் ஒரு சில விளம்பரப் படங்களின் தயாரிப்பின் போது பார்த்த போதே அவருள் ஒரு சிந்தனை ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன். தமிழ்த் திரை உலக வரலாற்றில் ஏன் இந்திய மற்றும் உலக திரைப்பட வரலாற்றில் கூட A.R. ரஹ்மான் பெயர் பொறிக்கப்பட்டது இந்தியர்கள் பலர் பெருமைப் பட்ட விஷயம். அவர் ஒரு தமிழர் என்கிற போது தமிழ் நாட்டு மக்களுக்கு, தன் வீட்டுப் பிள்ளை ஒரு பெரிய விருதை வாங்கி வந்தது போல் பெருமை என்றால் அது மிகையாகாது.

இசைக்கு ஏது மொழி என்பதை கோடம்பாக்கத்தில் இருந்து சென்று, ஹாலிவுட் இசை நிபுணர்களை சற்றே திரும்பி பார்க்க வைத்துள்ளார் நமது ரஹ்மான். இந்தியாவை ஒட்டி உள்ள ஒரு கதை என்பதால் ரஹ்மான் ஓகே என்று சிலர் எண்ணினாலும், இனி ஹாலிவுட்-ம் ரஹ்மானை அழைத்து தக்க வைத்துக் கொள்ளும் நாள் தூரத்தில் இல்லை.


இசை வரலாற்றில் தனக்கென்று ஒரு பாணியை வளர்த்துக் கொண்டவர்கள் எவ்வளவோ பேர் உண்டு என்றாலும் உலகளாவிய வகையில் இசை இமாலய சிகரத்தில் ஏறிய இந்திய இசைக் கலைஞனாய், இசை வானில் என்றும் மறக்க முடியாத துருவ நட்சத்திரமாய் ஒளி வீசும் A.R. ரஹ்மான் மேன் மேலும் சிறப்பு பெற வாழ்த்துகிறோம்.


A.R. ரஹ்மான் இட்டிருக்கும் இந்த வித்து இனி அவர் போல் பலரும் பயணம் செய்ய காத்திருக்கும் பலருக்கு ஒரு ஞான விருச்சமாய் நிழல் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது....


ஜெய் ஹோ ரஹ்மான்!


முகில்

5 comments:

  1. A.R Rahman is a great music composer and trend setter for sure. I congratulate him and am so happy about him winning the Oscar Award. There are so many young talents in Tamil films. Tamil films are not like before. They are open to new talents, new faces and new thoughts. This is a positive sign. I am sure people around the world now are looking at Indian films and the calibre of artists in higher scale due to Rahman. By winning the Oscar, he has taken India's name to all the households. Sure Jai ho Rahman!

    ReplyDelete
  2. A.R.ரெஹ்மான் நான் விரும்பிய இசைக் கலைஞர்களில் ஒருவர். அவர் ஒரு ஆஸ்கர் வாங்குவார் என்று நான் மட்டுமல்ல, யாருமே எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். ரெஹ்மான் உண்மையில் தமிழ் சினிமாவின் வரலாற்றில் தனக்கென்று ஒரு பாணியைக் கையாண்டவர். அவர் வந்த பின் அவரைப் போல் இசை அமைக்க வேண்டும் என்று எத்தனையோ இசை அமைப்பாளர்கள் வந்திருக்கிறார்கள் என்றால் ரெஹ்மான் அவர்களுக்கு ஒரு inspriation ஆக இருந்திருக்கிறார்.
    It is a great achievement to win an OSCAR...Hats Off to his spirits and talents!

    ReplyDelete
  3. ஏ.ஆர்.ரஹ்மான்....
    ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்கு இசையமைத்தற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. ஆஸ்கார் விருது என்பது தமிழனுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்திருக்கிறது. கனவை நிறைவேற்றியுள்ளார் தமிழ்க்குமரன் ரகுமான். "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்ற கூற்றுக்கு நீதான்யா உவமானம். விருது வழங்கும் விழாவில், பார்வையாளர்கள் மத்தியில்,தன்னடக்கத்துடன் உணர்ச்சிகரமாக பேசிய நீ "எல்லா புகழும் இறைவனுக்கே"! என்று தமிழில் பேசி உலகையே அதிர வைத்தாயே! அது... அது...அந்த தன்னடக்கந்தான்யா உன்னை உயர்த்தியிருக்கிறது. ஆஸ்கார் விருது பெற்று தேசத்துக்கே குறிப்பாக தமிழனுக்கு பெருமை சேர்த்து தந்த ரகுமானே! மென்மேலும் வளரட்டும் உன் இசைத்தொண்டு. வாழ்த்தி வணங்குகிறேன்.
    ராமசாமி நல்லமுத்துப்பிள்ளை
    ஒட்டாவா-கனடா

    ReplyDelete
  4. A.R ரஹ்மான் is one of the finest music composer! அவரது படைப்புகள் இளையராஜா போல் இல்லை என்றாலும், இளையராஜாவிற்குப் பின் வந்த இசையமைப்பாளர்களில் தனக்கென்று முத்திரை பதித்தவர் ரஹ்மான். ரஹ்மான் பாடல்கள் என்றால் தெற்கு மற்றும் வடக்கு இரண்டும் தாளமும் ஆட்டமும் போடும். Slumdog Millionaire மூலமாக மேற்கத்திய நாடுகளையும் ஆட வைத்த இசையமைப்பாளர் என்ற பெருமை அவரைச் சார்கிறது.

    இசைக்கு மொழியில்லை என்ற கருத்து ரஹ்மான் வாங்கிய ஆஸ்கர் விருது மூலம் நிருபணம் ஆகியுள்ளது.

    பிரதிப் சண்முகசுந்தரம்.

    ReplyDelete
  5. The most important thing I noticed in his acceptance speech during the Oscars is his simplicity and humility.

    And, not forgetting, I was impressed with his short speech unlike others who were giving a long list of names...

    ReplyDelete

Thank you for expressing your great thoughts!