Sunday, October 4, 2009

கந்தசாமி அப்பட்டமான அந்நியத்தனம்!

விக்ரம் பல நாட்க்களுக்குப் பின் அவர் பாணியில் வந்துள்ளார் என்பது ஓகே. ஆனால் விக்ரமுடைய சுய விலாசங்களில் இருந்து மீண்டு ஒரு படி மேலே சென்று ஒரு பண்பட்ட நடிகனாய் அவரைக் காண முடியவில்லை. அது கதையும் இயக்குனரும், தான் மறுபடியும் ஒரு தோல்வியை தழுவத் தயாராக இல்லை என்று அச்சம் கொண்ட விக்ரமுமாக முக்கோணக் கிரியையாய் கந்தசாமி உருவெடுக்க காரணம் என்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். விக்ரம் தன் நடிப்பில் கூட அப்படியே அந்நியத்தனத்தை காட்டியிருக்கிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விக்ரமின் நடிப்பாற்றல் என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது இங்கு எதிர்பார்த்த சூட்டைத் தரவில்லை.

சுசி கணேசன் அவர்கள் என்ன வித்தியாசமாக செய்திருக்கிறார் என்றால் எதுவும் இல்லை என்று சொல்லலாம். ஆனால் சமீப காலங்களில் விக்ரம் படங்கள் தழுவிய தோல்வியில் இருந்து அவரைக் காப்பாற்றி கொண்டுவந்து ஒரு வெற்றிப் படத்தை கொடுத்த ஒரு பெரும் வித்தியாசத்தை செய்துள்ளது ஒரு திறமைதான். மெகா பட்ஜெட் படத்தினை வியாபார அளவில் வெற்றி பெறவைத்ததை தவிர படத்தில் வித்தியாசங்கள் ஏதும் இல்லை.


கம்ப்யூட்டர் மூலமாக புகார் சேகரித்த கதா நாயகன் மரத்தில் கோர்த்த மக்கள் புகார் சீட்டுகளின் வலியைத்த் தீர்க்க முயல்கிறார் கந்த சாமியாக...


சண்டை காட்சிகளின் இயக்கம் நன்றாக உள்ளது. கிராபிக்ஸ் மற்றும் சண்டைக் கோர்ப்பு பார்க்கும் விதத்தில் இருந்தது.


நல்ல மசாலா அரைத்து தந்த ஒரு சமையல் கூடத்தை பார்க்க முடிகிறது! மசாலாவின் மனம் பரவாயில்லை என்றே கூற முடியும்!


கந்தசாமி கொக்கரித்த சத்தம் நம்மை எழுப்ப வில்லை என்றாலும் சேவல் கூவி விட்டது என்று அறிந்து கொள்ள முடிகிறது!


முகில்

2 comments:

  1. கந்தசாமியா... அய்யாசாமி!
    கந்தசாமி....
    திருபோரூரில் இருக்கும் முருகன் கோயிலில் பக்தர்கள் தங்களது கஷ்டத்தை பேப்பரில் எழுதி அங்குள்ள மரத்தில் கட்டி தொங்க விடுகிறார்களாம் அவர்களின் கஷ்டம் எதுவாகயிருந்தாலும் அது உடனே பூர்த்தி செய்யப்படுகிறதாம். இந்த மகா அதிசயத்துக்கு காரணம் கந்தசாமி-சாமி என மக்கள் நம்புகிறார்களாம் அப்படி படத்தை சொல்ல்யிருக்கிறார் ஆசாமி சுசி கணேசன். அண்ணா சுசி கணேசா தம்பி கந்தசாமி மீது ஏன் இத்தனை கோபம் அதற்காக இப்படி ஒரு படமா!
    இந்த படத்தில் விக்ரமின் பெண் வேடம் நன்றாக இருக்கிறது பேசாமல் அலியாகவே நடித்திருக்கலாம்!
    ஸ்ரேயாவின் முகத்தைவிட இடை நன்றாகவே நடித்திருக்கிறது.
    பிரபுக்கு அலட்டலில்லாத போலீஸ் அதிகாரி வேடம்..
    நான்கு ஆசாமிகள் சேர்ந்து கந்தசாமியை வெகு எதிர்பார்ப்புடன் இரவு கண் முழித்து பார்த்தோம் ஆனால் குறட்டை வந்ததுதான் மிச்சம்.
    இப்படத்திற்கு மேலும் விமர்சனத்தை தொடர்வது மெகா வேஸ்ட்..........

    ReplyDelete
  2. Though I didn't watch the full movie, from the songs and the movie clippings, I would say that your title of the criticism is apt. For some reason, the foreignness doesn't suit our actors. The way the movie tried to portray is so obvious and stands out.

    Because of this, I am not attracted to watch the movie.

    ReplyDelete

Thank you for expressing your great thoughts!