Tuesday, January 26, 2010

வாழ்த்துக்கள்! நற்பணி தொடரட்டும் பாலா...

இயக்குனராக வேண்டும் என்ற கனவு எத்தனையோ பேருக்கு உள்ளது. நான் நடிக்கத்தான் வந்தேன் ஆனால் இயக்குநராகி விட்டேன் என்று எத்தனையோ பேர் சொல்லியும் கேட்டிருக்கிறோம். இயக்குனராகிவிட்டாலும் கூட நல்ல கருத்துக்கள், சமுதாய அக்கறை உள்ள கதைகள், உணர்வு பூர்வமான அணுகுமுறை, கதை சொல்லும் பாங்கு போன்ற உயர்ந்த குணாதிசயங்கள் எல்லா இயக்குனர்களுக்கும் வந்துவிடுவதில்லை. நான் சேதுவில் சில காட்சிகளை பார்க்கும் போதே நினைத்தேன் நன்றாக முயன்றிருக்கிறார்கள் என்று. அப்போது இயக்குனர் யார் என்று நான் கேட்கவில்லை ஆனால் பாலா என்ற பெயர் மனதில் தங்கி இருந்தது. அண்மையில் நான் கடவுள் பார்த்த போது அதைப் பற்றி பாராட்டி ஒரு சிறு கருத்துப் பரிமாற்றம் பதிவு செய்திருந்தேன். அதில் கையாளப் பட்டிருக்கிற விஷயங்களை பாராடியிருந்தேன். இன்று பாலா ஒரு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார் என்ற போது மிக்க மகிழ்வடைகிறேன். நல்ல விஷயங்களை பார்க்கும் சில நல்ல உள்ளங்கள் இன்னும் தேர்வுக் குழுவில் இருப்பது தெரிய வருகிறது. கலை என்பது, மொழி மற்றும் வாழ்விட பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதை இந்த நல்ல தேர்வு உறுதி செய்திருக்கிறது. பாலாவின் தேர்வு இன்னும் நல்ல முயற்சிகள் செய்ய வளரும் இளம் உள்ளங்களுக்கு உரமாக அமையும். பாலா இன்னும் நல்ல திரைப்படங்களை உலகிற்குத் தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரைப்படக் கலையின் பரிமாணங்களை பாலா மேன்மேலும் ஆராய வேண்டும், புதிய முயற்சிகளை, கருத்துக்களை கையாள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ....

முகில்

2 comments:

  1. பாலாவிற்கும், இளையராஜாவிற்கும்(பத்மபூஷன்) கொஞ்சம் தாமதமாகவே பாராட்டும்,அங்கிகாரமும் கிடைத்திருக்கிறது. பாலா கடைசியாக எடுத்த நான் கடவுள் கொஞ்சம் மக்கள் மத்தியில் முறன்பாடான கருத்தே இருக்கிறது. பலருக்கு அந்த படம் பிடிக்கவில்லை. கமல் சொன்னது போல் ரசிகர்களும் சில சமயம் தவறுகள் செய்வதுண்டு. நல்ல படங்களை ஏற்றுக் கொள்ளாமல் தவற விட்டுவிடுவதுண்டு. பாலாவும், ராஜாவும் பாராட்டுக்களுக்கு அப்பார்பட்டவர்களே. பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நன்றி கோபி அவர்களே...நல்ல நோக்கு! விருது ஒரு அங்கீகாரம். தேசிய அளவிலான குழுவில் கலை மற்றும் தொழிலில் நேர்த்தி மிக்க பல மாநிலப் பிரதிநிதிகள் இருப்பதை அறிவீர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள பாலா ஒரு தமிழர், என்பது நாம் மகிழவேண்டிய விசயம்தானே! கலை பாராட்டுகளால் மெருகடைகிறது. பாராட்டுகள் கலைஞர்களை பார்க்க வைக்கிறது! எப்படிப்பட்ட கலைஞனுக்கும் பாராட்டே அங்கீகாரம். திரு இளையராஜாவும் அப்படித்தான். ஒரு காலத்தில் மக்களுக்கு புரியாத படங்கள் (Art films) சிறந்த படங்களாகவோ அப்படிப்பட்ட படங்களை இயக்கியவர்கள் சிறங்த இயக்குநர்களாக தேர்ந்தெடுக்க படுவதும் இருந்தது. இப்போது அந்நிலை மாறி ஜனரஞ்சகமான படங்களை இயக்கியவர்களும் பாராட்டுகளைப் பெறுவது நல்ல விசயம்! பாராட்டுக்கள் எளிதில் வருவதும் இல்லை. உங்களுக்கு நான் கடவுள் பிடித்திருந்ததா? பிடித்திருக்கும் பட்சத்தில் அது என்னை, உங்களைப் போன்ற ரசிகர்கள் ரசித்த படமும்தானே!

    ReplyDelete

Thank you for expressing your great thoughts!