Saturday, May 22, 2010

சுறா- பல் இல்லாமல்!

சுறா. விஜயின் அதிரடி கொஞ்சம் சக்தியற்றிருந்த ஒரு கமர்ஷியல் பட முயற்சி. கதை வழக்கமான கப்சா. வேற எதுவுமே சிந்திக்க தெரியாது என்ற விஷயத்தை மறுபடி ஒரு கதை மூலம் விளக்க முயன்றிருக்கிறார்கள்.  திரைக்கதையின் இயலாமையால், விஜய் படம் என்ற தன் வழக்கமான ஈர்ப்பை கொஞ்சம் இழந்து விடுகிறது

எவ்வளவு நாள் ஒரே மாதிரியான கதைகளை செய்வோம் என்று கேட்டால் இயக்குநர் மற்றும் கதாசிரியர், நம்மையே கேட்பார்கள், என்ன சார், எத்தனை நாள் இட்லி, சாம்பார் சாப்பிடுறீங்க என்று!

ஆனா நாங்க விடுற ஆளா? பக்குவம் இருக்குதுல்லண்ணே! என்று மதுரை தொனியில் அடிப்பமுல்ல.....

சுறா விஜய்-க்கு 50-வது படம் என்று எதிர்பார்ப்புடன் போனோம். மன்னிக்கனும் விஜய். உண்மையிலேயே கதையமைப்பு அந்த எதிர்பார்ப்பை வீணடித்து விட்டது. ஒரு சிறு மீனவ மக்களின் குப்பத்தில் வரும் குழப்பங்களை வைத்து கதை. அரசியல்வாதி, கதா நாயக எதிர்ப்பு, சண்டைக் காட்சிகள் என்று கதையை எடுத்து செல்லப் போராடுகையில், தமன்னாவின் செயற்கையான சினிமாத்தன அறிமுகம், நகைச்சுவையை மையமாக வைத்தாலும், அது சரியாக எடுபடவில்லை.  பாத்திரப் படைப்பின் அஸ்திவாரம் எந்த விதமான கதைக்கும் முக்கியம். விஜய் போன்ற வியாபார ஸ்திரம் கொண்ட நடிகர்களை வைத்து எடுக்கும் போது இன்னும் ஒரு 'நச்' வேணும். "அதாவது சும்மா நச்ன்னு இருக்கணும்ணே!"


நான் யாருடைய முயற்சியையும் குறை கூறவில்லை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்தப் படத்தில் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரு வழக்கமான கதையை வழக்கமான சிந்தனையுடன், வழக்கமான முறையில் படமாக்கி கொடுத்திருந்தனர்.

வடிவேல் காமெடி ட்ராக் கூட அவ்வளவு சூடு இல்லாமல் இருந்தது.

மற்ற தொழில் நுட்பக் கலைகளின் பங்கும் பரிமளிக்கவில்லை. பரவாயில்லை என்றே சொல்லலாம். விஜய், தயாரிப்பாளர் சங்கிலி முருகன் அவர்களுக்கு ஒரு பிரியத்தின் பேரில் கால்ஷீட் கொடுத்து இந்தக் கதைக்கு நடித்தாரா என்று ஒரு எண்ணம் கூட வருகிறது. இசையமப்பாளர் மணி சர்மாவின் பாடல்கள் கூட இதில் மிளிரவில்லை என்றே கூற வேண்டும்.

நண்பர் ராஜ்குமாரின் இயக்கம் அவர் கதையை உருவாக்கி, திரைகதையாய் மாற்றும் லாவகம்,  இன்னும் சிறப்பு பெற வேண்டும் என வேண்டுகிறேன்.

முயற்சியின் பக்குவம், திறன் போன்றவை எந்த தொழிலிலும் மிக மிக முக்கியம். திரைப்படத்திற்கு அது மிக மிக மிக முக்கியம். அதுவும் வியாபார ரீதியில் எடுக்கப் படும் படங்களுக்கு மிக, மிக, மிக, மிக,மிக முக்கியம். அது இல்லாதது சுறா பல்லில்லாமல் வந்து கடிக்க வாய் திறந்தது போல் தோன்றியது.


முகில்.


4 comments:

  1. ayyo paavame!!!!

    ReplyDelete
  2. முயற்சியின்அவ்வளவு சூடு இல்லாமல் இருந்தது. நான் யாருடைய முயற்சியையும் குறை கூறவில்லை.விஜய் படம் என்ற"அதாவது சும்மா நச்ன்னு இருக்கணும்ணே!"சுறா- பல் இல்லாமல்!சுறா- பல் இல்லாமல்!சுறா- பல் இல்லாமல்! popshankar@in.com popshankar salem t.n

    ReplyDelete
  3. பெயர் கூற விரும்பாமல் ஐயோ பாவமே என்று அங்கலாய்த்த நண்பருக்கும், பல் இல்லாமல் என்ற வார்த்தைகளை எதிரொலி போல் ஒலித்து அவரது ஏமாற்றத்தை உணர்த்திய பாப் சங்கர் அவர்களுக்கும் எனது நன்றி.

    ReplyDelete
  4. Just imagined the sura ...without pal....so, the ayyo paavamee.....

    ReplyDelete

Thank you for expressing your great thoughts!