Monday, May 18, 2009

அயன் ஒரு கமர்ஷியல் பொழுது போக்கு!

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா-தமன்னா நடித்து வெளி வந்திருக்கும் அயன் தமிழ் சினிமாவின் ஹை-டெக் மசாலா. இளவட்டங்களைக் கவர்நதால் வெற்றிக் கனி கிட்டாமலா போய் விடும் என்ற ஒரு சூத்திரத்தை நன்றாக உபயோகப் படுத்தி தம் வெற்றியை வியாபார ரீதியாக தக்க வைத்துக் கொண்டுள்ள இயக்குனருக்கு வாழ்த்துக்கள் சொன்னாலும், அவர் கதா நாயகனை தேர்ந்தெடுத்த கதா பாத்திர ஸ்தானம் இளம் நெஞ்சங்களுக்கு நாம் எதைச் செய்தாலும் ஓகே என்றொரு மனப்பக்குவத்தை கொடுக்க கூடியதாய் உள்ளது.

தேவா என்ற பாத்திரத்தில் இயங்கும் சூர்யா ஒரு கடத்தல் மன்னன். சுங்க இலாகா அதிகாரிகள், எதிரிகள், மற்ற கடத்தல் கூட்ட அடியாட்கள் கண்களில் மண்ணை தூவி விட்டு கடத்தல் தொழிலில் ஒரு சூப்பர் ஏஜென்டாக பிரபுவிடம் வேலை செய்கிறார். ஒரு கம்ப்யூட்டர் பட்டதாரியான அவர், இப்படி ஒரு கடத்தல் தொழில் செய்வது மக்களுக்கு அதுவும் இளைஞர்களுக்கு கெட்ட எண்ணங்களை விதைக்கும் வித்து போல் இருக்கிறது. இயக்குனர் கே.வி.ஆனந்த் இந்த ஒரு விஷயத்தை மாற்றி இருந்திருக்கலாம். நல்ல எண்ணமுள்ள தேவாவாக வரும் சூர்யா செய்யும் தொழில் தெரிந்தும் அவரைக் காதலிக்கிறரா தமன்னா என்று கேட்க்க தோன்றினாலும் அதை பட்டும் படாமலும் கொண்டு சென்று விட்டார் இயக்குனர்.


வழக்கமான மசாலா கதையை தொழில் நுட்ப மேம்பாட்டுடன் பவ்யமாக செய்யக் கூடிய வித்தைகள் தமிழ்ப் படங்களில் வந்து ஜாலம் காட்டிக் கொண்டிருக்கும் புதிய தமிழ்ப் படங்களில் அயன் இன்னோன்றே தவிர, சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் எதுவும் கதா பாத்திரங்கள் மூலமாகவோ, கதையின் மூலமாகவோ சொல்லப் படவில்லை, சொல்லவும் முடியாது. படத்தின் கருத்தே அப்படி என்றால் இதில் சிறப்பாக சொல்ல என்ன இருக்கிறது?


ஹீரோயிசம் என்ற பழைய படங்களின் நல்ல கதா நாயகர்கள் காணமல் போய் தற்கால கதா நாயகர்கள் திருடர்களாய், கடத்தல் காரர்களாய், கொலை காரர்களாய் தொடர்ந்து வந்தாலும், பொழுது போக்கு என்று எண்ணப்படும், சொல்லப்படும் விஷயங்கள் கொஞ்சம் விஷத்தையும் சில உள்ளங்களில் கலந்தால் ஆச்சர்யப்படுவதற்க்கில்லை.


திரைப்படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் சிரத்தையுடன் நல்ல முயற்சி செய்திருக்கின்றனர். M.S. பிரபுவின் ஒளிப்பதிவு ஏற்கனவே நல்ல ஒளிப்பதிவாலராய் இருந்த கே.வி. ஆனந்துடன் சேர்ந்து நல் வடிவு தருகிறது. கலை இயக்கம், சண்டைக் காட்சிகள் இயக்கம், நடனம் என்ற புது முயற்சிகள் நன்குள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை மிகவும் ரசிக்கும் படியில் இருக்கிறது. பாடல்கள் ஏற்கனவே எல்லோர் வாயிலும் முனுமுனுக்கப்பட்டு டாப் 10-ல் உள்ளது.


அயன் என்ற பெயர்காரணம் பற்றி யாரவது சொன்னால் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் ion என்று சொல்வது ஒரு அணுசக்தியின் சேர்க்கை ரூபம் என்று பொருள் கொள்ளலாம். அதுதான் இயக்குனரும் சொல்ல வருகிறாரா என்று யூகிக்கிறேன். மொத்தத்தில் அயன் 6/10 மார்க் பெறுகிறது.

3 comments:

 1. அயன்......
  இப்படத்தில் சூர்யாவுக்கு இரண்டு முகம் ஒன்று கடத்தல் மற்றது காதல் இரண்டிலும் நகைச்சுவை கலந்து அசத்தியிருக்கிறார். உரிரைப்பணயம் வைத்து வைரத்தை கடத்துகிறார். ஒரு வித பத்ற்றமும் அவரிடம் காணவில்லயே! பரம்பரை கடத்தல் காரறாக இருப்பாரோ!.

  நண்பன் எதரியின் கையாள் என்பது தெரிய வந்ததும் சூர்யாவின் கோபமும்,நடிப்பும் எகிர்கிறது.

  ஒளிப்பதிவு நல்ல தரமாகவுள்ளது. சண்டைகாட்சிகள் ஜோர். சூர்யாவின் அம்மாவாக ரேணுகா.. அட நம்ம ரேணுகா!
  வில்லனின் கணக்கர் திடீரென வில்லனுக்கு எதிராக திரும்புவதும் அதற்கு வில்லன் அவரது பழி தீர்ப்பது போன்ற காட்சிகள் அவ்வளவு ஒட்ட வில்லை.
  அயன்... ஓகே தான்.

  ReplyDelete
 2. உங்கள் வலைக்கு இதுவே என் முதல் வருகை. நண்பர் தாயுமானவன் மூலம் தங்கள் வலை பற்றி அறிந்தேன்.

  தங்கள் சினிமா ஆர்வமும் ஆதங்கமும் சிறப்பு.

  உலக சினிமா பற்றிய எனது வலை பூ பார்க்கவும்.

  நிறை / குறை கூறவும்.

  வாழ்த்துகள்

  சூர்யா

  ReplyDelete
 3. I liked the movie. In fact, I enjoyed.

  After Ayan, I happened to watch an English movie in which there is a very same story line of diamond ,..this and that...

  The copying is so explicit...at least they could have taken the concept alone and modified it differently.

  On the whole..it was ok..and I liked the songs....

  ReplyDelete

Thank you for expressing your great thoughts!