ரசிகர்களே நல்ல நடுவர்கள். தீர்ப்புகள் அவர்களால்தான் நிச்சயிக்கப் படுகின்றன. படம் எப்படி ரசிக்கப்பட்டது என்பதை வைத்து படைப்பாளிகள் பாராட்டு பெறுகிறார்கள். இங்கு உங்கள் தீர்க்கமான கருத்துக்களை வரவேற்கிறேன். திரைப்படக் கலையின் ஆக்கதாரிகளின் படைப்புத்திறன் பற்றிய மேன்மையான் கருத்துக்களை நீங்கள் பரிமாற வேண்டும். உங்கள் கருத்துக்கள் அவர்களின் படைப்பாற்றலை மெருகு படுத்தும் சாணைக்கல்! உங்கள் வருகைக்கு நன்றி....முகில்
இயக்குனராக வேண்டும் என்ற கனவு எத்தனையோ பேருக்கு உள்ளது. நான் நடிக்கத்தான் வந்தேன் ஆனால் இயக்குநராகி விட்டேன் என்று எத்தனையோ பேர் சொல்லியும் கேட்டிருக்கிறோம். இயக்குனராகிவிட்டாலும் கூட நல்ல கருத்துக்கள், சமுதாய அக்கறை உள்ள கதைகள், உணர்வு பூர்வமான அணுகுமுறை, கதை சொல்லும் பாங்கு போன்ற உயர்ந்த குணாதிசயங்கள் எல்லா இயக்குனர்களுக்கும் வந்துவிடுவதில்லை. நான் சேதுவில் சில காட்சிகளை பார்க்கும் போதே நினைத்தேன் நன்றாக முயன்றிருக்கிறார்கள் என்று. அப்போது இயக்குனர் யார் என்று நான் கேட்கவில்லை ஆனால் பாலா என்ற பெயர் மனதில் தங்கி இருந்தது. அண்மையில் நான் கடவுள் பார்த்த போது அதைப் பற்றி பாராட்டி ஒரு சிறு கருத்துப் பரிமாற்றம் பதிவு செய்திருந்தேன். அதில் கையாளப் பட்டிருக்கிற விஷயங்களை பாராடியிருந்தேன். இன்று பாலா ஒரு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார் என்ற போது மிக்க மகிழ்வடைகிறேன். நல்ல விஷயங்களை பார்க்கும் சில நல்ல உள்ளங்கள் இன்னும் தேர்வுக் குழுவில் இருப்பது தெரிய வருகிறது. கலை என்பது, மொழி மற்றும் வாழ்விட பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதை இந்த நல்ல தேர்வு உறுதி செய்திருக்கிறது. பாலாவின் தேர்வு இன்னும் நல்ல முயற்சிகள் செய்ய வளரும் இளம் உள்ளங்களுக்கு உரமாக அமையும். பாலா இன்னும் நல்ல திரைப்படங்களை உலகிற்குத் தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரைப்படக் கலையின் பரிமாணங்களை பாலா மேன்மேலும் ஆராய வேண்டும், புதிய முயற்சிகளை, கருத்துக்களை கையாள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ....
பாலாவிற்கும், இளையராஜாவிற்கும்(பத்மபூஷன்) கொஞ்சம் தாமதமாகவே பாராட்டும்,அங்கிகாரமும் கிடைத்திருக்கிறது. பாலா கடைசியாக எடுத்த நான் கடவுள் கொஞ்சம் மக்கள் மத்தியில் முறன்பாடான கருத்தே இருக்கிறது. பலருக்கு அந்த படம் பிடிக்கவில்லை. கமல் சொன்னது போல் ரசிகர்களும் சில சமயம் தவறுகள் செய்வதுண்டு. நல்ல படங்களை ஏற்றுக் கொள்ளாமல் தவற விட்டுவிடுவதுண்டு. பாலாவும், ராஜாவும் பாராட்டுக்களுக்கு அப்பார்பட்டவர்களே. பதிவுக்கு நன்றி.
நன்றி கோபி அவர்களே...நல்ல நோக்கு! விருது ஒரு அங்கீகாரம். தேசிய அளவிலான குழுவில் கலை மற்றும் தொழிலில் நேர்த்தி மிக்க பல மாநிலப் பிரதிநிதிகள் இருப்பதை அறிவீர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள பாலா ஒரு தமிழர், என்பது நாம் மகிழவேண்டிய விசயம்தானே! கலை பாராட்டுகளால் மெருகடைகிறது. பாராட்டுகள் கலைஞர்களை பார்க்க வைக்கிறது! எப்படிப்பட்ட கலைஞனுக்கும் பாராட்டே அங்கீகாரம். திரு இளையராஜாவும் அப்படித்தான். ஒரு காலத்தில் மக்களுக்கு புரியாத படங்கள் (Art films) சிறந்த படங்களாகவோ அப்படிப்பட்ட படங்களை இயக்கியவர்கள் சிறங்த இயக்குநர்களாக தேர்ந்தெடுக்க படுவதும் இருந்தது. இப்போது அந்நிலை மாறி ஜனரஞ்சகமான படங்களை இயக்கியவர்களும் பாராட்டுகளைப் பெறுவது நல்ல விசயம்! பாராட்டுக்கள் எளிதில் வருவதும் இல்லை. உங்களுக்கு நான் கடவுள் பிடித்திருந்ததா? பிடித்திருக்கும் பட்சத்தில் அது என்னை, உங்களைப் போன்ற ரசிகர்கள் ரசித்த படமும்தானே!
ஒரு கருத்து சிறப்படைவது சிந்தனையையும், அதன் ஆராய்வையும், சொல்லும் பாங்கையும் பொருத்ததாகும் என்று சொல்லலாம். திரைப்படப் படைப்பாளிகளின் தவறுகளை சுட்டிக்காட்டவும், அவர்கள் படைப்பின் நிறை குறைகளை அலசவும் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.
நீங்கள் இங்கு படைப்புகளை அனுப்ப, உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. Gmail account or Yahoo account or OpenID இருந்தால் மிகச் சுலபம். Comments என்று ஒவ்வொரு கருத்து வெளிப்பாட்டுக்கு கீழேயும் உள்ள வார்த்தையை click செய்து உங்கள் கருத்துக்களை வெளியிடலாம்.
மாற்று முறையாக கருத்தை சொல்ல விரும்புவர்கள் tamilfilmcritic@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்வதன் மூலமும் கருத்து பரிமாற்றங்கள் பதிவிடப்படும்.
I see films as a great medium of expression. No other art combines technology and aesthetics as film does. Films have many faces like people have. Each film intends to say something but those who are effective in communicating reach people's spirit.
எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
-
கண்கள் பார்த்த தருணங்கள்
இடையில் மிதந்த காற்று
காதல் சுமந்தது
பார்வைகளின்
மொழிகளில்
தூரம் குறைந்தது
மனப் பாரம்
நிறைந்தது
மௌனம்....
புன்னகை....
வினாடிகள...
Solitary Moments of Dream...
-
Just as the quietness slept still
Just as the bustle of souls slumbered
never resting light
wanting to peek
spilled its gaze
following darkness…
Love for ...
ரகசியம் (தி சீக்ரெட்) - தொடர்- முன்னுரை
-
*என்னுடைய முன்னுரை*
ரகசியம் (தி சீக்ரெட்) இந்தப் புத்தகத்தை முதலில் படிக்கும் முன், எனக்கு இதன்
வீடியோ தான் கிடைத்தது. அதை ஐபாட் ஃபார்மட்டிற்கு (mp4)மாற்...
மதம் நமக்குத் தேவையா?
-
யார் உருவாக்கியது மதம்? ஏன் மனிதன் மட்டும் பலப் பல மூட நம்பிக்கைகளின்
பெட்டகமாய் உள்ளான்? அறிவு ஜீவியாய் இருக்கும் மனிதன்தான் முழு முட்டாளாகவும்
உள்ளான்.
...
பாலாவிற்கும், இளையராஜாவிற்கும்(பத்மபூஷன்) கொஞ்சம் தாமதமாகவே பாராட்டும்,அங்கிகாரமும் கிடைத்திருக்கிறது. பாலா கடைசியாக எடுத்த நான் கடவுள் கொஞ்சம் மக்கள் மத்தியில் முறன்பாடான கருத்தே இருக்கிறது. பலருக்கு அந்த படம் பிடிக்கவில்லை. கமல் சொன்னது போல் ரசிகர்களும் சில சமயம் தவறுகள் செய்வதுண்டு. நல்ல படங்களை ஏற்றுக் கொள்ளாமல் தவற விட்டுவிடுவதுண்டு. பாலாவும், ராஜாவும் பாராட்டுக்களுக்கு அப்பார்பட்டவர்களே. பதிவுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி கோபி அவர்களே...நல்ல நோக்கு! விருது ஒரு அங்கீகாரம். தேசிய அளவிலான குழுவில் கலை மற்றும் தொழிலில் நேர்த்தி மிக்க பல மாநிலப் பிரதிநிதிகள் இருப்பதை அறிவீர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள பாலா ஒரு தமிழர், என்பது நாம் மகிழவேண்டிய விசயம்தானே! கலை பாராட்டுகளால் மெருகடைகிறது. பாராட்டுகள் கலைஞர்களை பார்க்க வைக்கிறது! எப்படிப்பட்ட கலைஞனுக்கும் பாராட்டே அங்கீகாரம். திரு இளையராஜாவும் அப்படித்தான். ஒரு காலத்தில் மக்களுக்கு புரியாத படங்கள் (Art films) சிறந்த படங்களாகவோ அப்படிப்பட்ட படங்களை இயக்கியவர்கள் சிறங்த இயக்குநர்களாக தேர்ந்தெடுக்க படுவதும் இருந்தது. இப்போது அந்நிலை மாறி ஜனரஞ்சகமான படங்களை இயக்கியவர்களும் பாராட்டுகளைப் பெறுவது நல்ல விசயம்! பாராட்டுக்கள் எளிதில் வருவதும் இல்லை. உங்களுக்கு நான் கடவுள் பிடித்திருந்ததா? பிடித்திருக்கும் பட்சத்தில் அது என்னை, உங்களைப் போன்ற ரசிகர்கள் ரசித்த படமும்தானே!
ReplyDelete